ஆப்நகரம்

ஐந்தாவது பால்ன் டி அர் விருதை வென்று, மெஸ்ஸியை மெர்சலாக்கிய ரொனால்டோ!

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பால்ன் டி அர் விருதை இந்த ஆண்டு ரொனால்டோ வென்றுள்ளார். இதன் மூலம் ஐந்து முறை வென்ற மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்

TNN 8 Dec 2017, 5:13 am
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பால்ன் டி அர் விருதை இந்த ஆண்டு ரொனால்டோ வென்றுள்ளார். இதன் மூலம் ஐந்து முறை வென்ற மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
Samayam Tamil christiano ronaldo wins his fifth ballon dor and equals the record of messi
ஐந்தாவது பால்ன் டி அர் விருதை வென்று, மெஸ்ஸியை மெர்சலாக்கிய ரொனால்டோ!


பிரான்ஸின் கால்பந்து அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு பால்ன் டி அர் விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. கால்பந்து உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் இதைப் பெறுவது ஒவ்வொரு கால்பந்து வீரரின் கனவாக உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்களின் ஓட்டுக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோரின் ஒட்டுக்களின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விருதை 5 முறை மெஸ்ஸியும், 4 முறை ரொனால்டோவும் வென்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான விருது இன்று அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த 30 வீரர்கள் இந்த விருதிற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ ஐந்தாவது முறையாக அந்த விருதை வென்று சாதனைப் படைத்தார்.
இதன்மூலம் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த விருதுப் பட்டியலில் மெஸ்ஸிக்கு இரண்டாவது இடமும் நெய்மருக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்