ஆப்நகரம்

ஸ்டட்கர்ட் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பெடரர்

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் கிர்கியோஸை வீழ்த்திய ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Samayam Tamil 17 Jun 2018, 1:32 am
ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் கிர்கியோஸை வீழ்த்திய ரோஜர் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Samayam Tamil 1529138775_roger-federer


ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்காம் நிலை வீரரான நிக் கிர்கியோஸை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை கிர்கியோஸ் 7-6 (7-2) என கைப்பற்றினார். அதன்பின் ஆவேசத்துடன் ஆடிய பெரடர் 2வது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து ஆட்டத்தில் தீவிரம் காட்டிய பெடரருக்கு 3வது செட்டில் கிர்கியோஸ் கடும் சவாலாக மாறினார். ஆனால், இறுதியில் அந்த செட்டையும் பெடரர் 7-6 (7-5) என தனதாக்கினார்.

இதன்மூலம் 6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட் கணிக்கில் வெற்றி பெற்ற பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இத்துடன் தரவரிசையில் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பெடரர் கனடாவின் மிலோஸ் ரோனிக்கை எதிர்கொள்வார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்