ஆப்நகரம்

ஃபெராரி ஓட்டுநர் லெக்லர்கிர்க்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சார்லஸ் லெக்லர்க் மொனாக்கோவில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 15 Jan 2021, 4:28 pm
ஃபெராரி ஓட்டுநரான சார்லஸ் லெக்லர்க் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்
Samayam Tamil சார்லஸ் லெக்லர்க்
சார்லஸ் லெக்லர்க்


ஃபார்முலா ஒன் போட்டியில் கடந்த ஆண்டு எட்டாம் இடம் பிடித்தவர் சார்லஸ் லெக்லர்க். 2018 ஆம் ஆண்டு சாபர் அணியின் சார்பாக தனது முதல் ஃபார்முலா ஒன் போட்டியை சந்தித்தார். 2018 ஆம் ஆண்டு 39 புள்ளிகளுடன் 13ஆவது இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஃபெராரி அணியை சேர்ந்த கிமி ராய்கொணன் சாபர் அணியில் இணைய, லெக்லர்க் ஃபெராரியில் இணைந்தார். 2019 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் அணியினர் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்த சமயத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

வெளியேறியது ரியல் மாட்ரிட்: செய்த தவறுகளுக்கு தக்க தண்டனை கொடுத்த ராவுல் கார்சியா!

2020ஆம் ஆண்டை 98 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் முடித்தார். இவர் நேற்று அவரது ட்விட்டர் பக்கததில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் மொனாக்கோவில் இருக்கும் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்