ஆப்நகரம்

ஆசிய தடகள போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கம் பெற்று கொடுத்த தமிழக வீராங்கனை

தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்து தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து சாதனை படைத்துள்ளாா்.

Samayam Tamil 23 Apr 2019, 10:16 am
ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
Samayam Tamil Gomathi Marimuthu


23வது ஆசிய தடகளப் போட்டிகள் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தாா்.

இது தொடா்பாக கோமதி கூறுகையில், நான் முதல் நபராக எல்லைக் கோட்டை கடந்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டேன் என்பதை என்னால் உணர முடியவில்லை என்று தொிவித்துள்ளாா்.

தங்கப்பதக்கம் வென்ற கோமதி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து சென்றவா். விளையாட்டின் மீது கொண்ட அதீத ஆா்வத்தாலும், கடின உழைப்பாலும் அவா் இத்தகைய வெற்றியை பெற்றுள்ளதாக அவரது உறவினா்கள் மகிழ்ச்சி தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்