ஆப்நகரம்

இந்தியாவிடம் உதவிக்கரம் கோரிய ஹாக்கி வீரா் மன்சூர் மரணம்

இந்தியாவிடம் உதவிக்கரம் கோரியிருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அகமது கராச்சியில் உயிாிழந்தாா்.

Samayam Tamil 13 May 2018, 12:01 pm
இந்தியாவிடம் உதவிக்கரம் கோரியிருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அகமது கராச்சியில் உயிாிழந்தாா்.
Samayam Tamil Mansoor Ahamed


பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான மன்சூர் அலிகான் இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருளாதார ரீதியாக அந்நாட்டு கிாிக்கெட் வீரா் அப்ரிடி உள்ளிட்டோா் மன்சூா் அலிகானுக்கு உதவி செய்து வந்தனா். இருப்பினும் அவருக்கு பாகிஸ்தானில் இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
https://www.youtube.com/watch?time_continue=54&v=m85OPaNQfN8
இந்தியாவில் இருதய மாற்று அருவை சிகிச்சை சிறந்த முறையில் நடைபெறுவதை அறிந்த மன்சூர் அகமது இந்திய அரசிடம் உதவிக்கரம் கோரியிருந்தாா். மேலும் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதாக சென்னையைச் சோ்ந்த பிரபல தனியாா் மருத்துவமனை சாா்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வந்ததால் மன்சூா் அகமது சிகிச்சை பலன் இன்றி கராச்சி நகரில் உயிாிழந்தாா்.

மன்சூா் அகமது பாகிஸ்தான் ஹாக்கி அணிக்காக 1986ம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை 338 சா்வதேச போட்டிகளிலும் 3 ஒலிம்பிக் தொடா்களிலம் விளையாடியுள்ளாா். இவரது மறைவு அந்நாட்டு ஹாக்கி ரசிகா்களை வெகுவாக பாதித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்