ஆப்நகரம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் நான்கு தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

TNN 8 Jul 2017, 10:15 am
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் நான்கு தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
Samayam Tamil india athletes bag four gold medals on day 2 of asian athletics championships
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள்


ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெறும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி பதக்கங்களைக் குவித்தனர்.

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய்குமார், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது அனாஸ், மகளிர் பிரிவிற்கான 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் நிர்மலா செரோன், 1,500 மீட்டர் ஓட்டத்தில் சித்ரா தங்கப்பதக்கம் வென்றனர்.

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழக வீரர் ஆரோக்கியா வெள்ளிப் பதக்கமும் ஜிஸ்னா மேத்யூ வெண்கலமும் வென்றனர். ஒரே நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 4 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகள் பங்கேற்றுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்