ஆப்நகரம்

ஹாக்கி: வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி

ஹாக்கி வேல்டு லீக் பைனல் தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

TOI Sports 10 Dec 2017, 7:13 pm
ஹாக்கி வேல்டு லீக் பைனல் தொடரின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
Samayam Tamil india beat germany 2 1 to win bronze medal
ஹாக்கி: வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய அணி


ஹாக்கி வேல்டு லீக் பைனலின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று ஒரிசாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொண்டது.

இப்போட்டியின் 21வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் முதல் கோல் போட்டு அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். இதற்கு ஜெர்மனி வீரர் மார்க் அப்பெல் பதில் கோல் போட்டார்.



பின்னர் ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு மீண்டும் முன்னிலை அளித்தார்.
#HWL2017 #INDvGER India beat Germany 2-1 to win bronze medalhttps://t.co/4hXt7Xd2Jc — TOI Sports (@toisports) December 10, 2017 இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜெர்மனி அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்