ஆப்நகரம்

இந்தியா எல்லாத்துக்கும் சரிப்பட்டு வரும்

இந்தியா எந்த பெரிய விளையாட்டு போட்டியையும் நடத்தும் வசதிகளைக் கொண்டிருப்பதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபேன்டினோ கூறியுள்ளார்.

TNN 27 Oct 2017, 9:51 am
இந்தியா எந்த பெரிய விளையாட்டு போட்டியையும் நடத்தும் வசதிகளைக் கொண்டிருப்பதாக சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபேன்டினோ கூறியுள்ளார்.
Samayam Tamil india ready to host any big event fifa president
இந்தியா எல்லாத்துக்கும் சரிப்பட்டு வரும்


இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபேன்டினோ இந்தியா வந்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியா தற்போது கட்டமைப்பு வசதிகளிலும் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது. எந்த பெரிய விளையாட்டுத் தொடரையும் இப்போது இந்தியா கண்டிப்பாக நடத்த முடியும்.” என்று கூறியுள்ளார்.

பேட்டியின் போது கியானியுடன் இருந்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ப்ரஃபூல் படேல், 2019ஆம் ஆண்டு நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரையும் இந்தியாவில் நடத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று நடைபெறும் FIFA கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் ப்ரஃபூல் படேல் பங்கேற்கிறார். இதில், 2019ஆம் ஆண்டு நடைபெறும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரை நடத்த விண்ணப்பித்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்