ஆப்நகரம்

ஃபிபா ரேங்கிங்கில் சறுக்கலை சந்தித்த இந்திய அணி!

கத்தாருக்கு எதிரான டிரா, வங்கதேச அணிக்கு எதிரான தோல்வியால் இந்திய அணி ஃபிபா தரவரிசையில் சறுக்கலை சந்தித்துள்ளது.

Samayam Tamil 24 Oct 2019, 5:04 pm
சர்வதேச கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை ஃபிபா இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணி இரண்டு இடங்கள் பின்தங்கி 106வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
Samayam Tamil Indian Football Team


தோல்வி காரணமா?
கடந்த செப்டம்பர் மாதம் ஆசிய சாம்பியனான கத்தாருக்கு எதிரான போட்டியை இந்திய அணி 0-0 என டிரா செய்தது. தொடர்ந்து இந்தியாவில் 187வது இடத்தில் உள்ள வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி காரணமாக இரண்டு இடங்கள் சறுக்கலை சந்தித்துள்ளது.

பெல்ஜியம் டாப்
முன்னதாக 104வது இடத்தில் இருந்த இந்திய அணி 106வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெல்ஜியம் நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக்கொண்டது. இதே போல பிரான்ஸ் (இரண்டாவது இடம்), பிரேசில் (மூன்றாவது இடம்) அணிகளும் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

மற்ற முன்னேற்றம்
மற்ற அணிகளான உருகுவே 1 இடம் முன்னேறி 5வது இடமும், குரோசியா 1 இடம் முன்னேறி 7வது இடமும், அர்ஜெண்டினா, 1 இடம் முன்னேறி 9வது இடமும் பிடித்தன. இதே போல உக்ரைன் (22வது இடம்), ஜப்பான் (28வது இடம்), துருக்கி (32வது இடம்), ரஷ்யா (37வது இடம்) அணிகள் முன்னேற்றம் கண்டன.

10 இடங்கள்
இதேபோல டாப் 50 இடங்களை தாண்டி, 10 இடங்களுக்கு மேல் முனேற்றம் கண்ட அணிகளில் நிகரகுவா (137வது இடம்), தெற்கு சூடான் (162வது இடம்), பார்போடாஸ் (160வது இடம்), சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி (180வது இடம்) அணிகள் தரவரிசையில் 10 இடங்களுக்கு மேல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்