ஆப்நகரம்

ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி வீராங்கனை சுனிதா லாக்ரா: காயத்தால் திடீர் முடிவு!

புதுடெல்லி: இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை சுனிதா லாக்ரா திடீரென ஓய்வை அறிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Jan 2020, 3:09 pm
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை சுனிதா லாக்ரா (28 வயது). இவர் கடந்த 2018இல் ஆசிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவரின் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
Samayam Tamil Sunitha Lakra


12 ஆண்டு பயணம்
இந்நிலையில் கடந்த 2008 முதல் இந்திய அணியில் சுனிதா விளையாடி வருகிறார். கடந்த 2018இல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியை சுனிதா வழிநடத்தினார். மேலும் 2014 ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் சுனிதா இடம் பெற்றிருந்தார்.ஒட்டு மொத்தமாக இதுவரை 139 போட்டிகளில் இந்திய அணிக்காக சுனிதா விளையாடியுள்ளார்.

காயத்தால் அவதி
இதுகுறித்து சுனிதா கூறுகையில், “இன்று மிகவும் உணர்ச்சிப் பூர்வமான நாள். நான் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். கடந்த 2016இல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.


மேலும் ஒரு ஆப்ரேஷன்
கடந்த 30 ஆண்டுகளில் இந்திய அணி முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது. தற்போதும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தீவிரமாக தயாராகி வந்தேன் . ஆனால் எனது காயம் என் கனவை தூள் தூளாக்கி விட்டது. மருத்துவர்கள் எனது காயத்துக்காக மேலும் ஒரு ஆப்ரேஷன் தேவை என தெரிவித்துள்ளனர். இந்திய அணிக்காக விளையாடிய தருணங்கள் என் மனதில் இருந்து நீங்காது.

கணவருக்கு நன்றி
இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த என் கணவர், என் நண்பர்கள், என் குடும்பத்தார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் காயத்துக்கு தேவையான மருத்துவ உதவியை அளித்த ஹாக்கி இந்தியாவுக்கும் இந்த நேரத்தில் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்