ஆப்நகரம்

ரஷ்யா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் சவ்ரப் வெர்மா

ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை இந்திய வீரர் சவ்ரப் வெர்மா வென்று அசத்தியுள்ளார்.

Samayam Tamil 29 Jul 2018, 4:05 pm
மாஸ்கோ : ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை இந்திய வீரர் சவ்ரப் வெர்மா வென்று அசத்தியுள்ளார்.
Samayam Tamil sourabh-verma


ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ரஷ்யா ஓபன் 2018 பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவ்ரப் வெர்மா மற்றும் ஜப்பானின் கோகி வடனபே மோதினர்.

இந்த போட்டியில் இந்தியாவின் சவ்ரப் வெர்மா 18-21, 21-12, 21-17 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப் பெற்று தங்க பதக்கம் வென்றார்.


அதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர் மற்றும் குஹோ கார்க் இணை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்