ஆப்நகரம்

ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லுமா சென்னை அணி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி இன்று பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் மோதுகின்றன.

Samayam Tamil 17 Mar 2018, 1:12 pm
பெங்களூரு : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி இன்று பெங்களூரு எஃப்சி மற்றும் சென்னை எஃப்சி அணிகள் மோதுகின்றன.
Samayam Tamil indian super league final chennaiyin fc play against bengaluru fc
ஐஎஸ்எல் கால்பந்து : பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்லுமா சென்னை அணி


பெங்களூரு சாகசம்:
முதன் முறையாக ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள பெங்களூரு அணி லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததோடு இறுதிப் போட்டி வரைக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள வெனிசுலாவின் Miku 14 கோல்களும், இந்தியாவின் சுனில் சேத்ரி 10 கோல்களும் அடித்து இறுதிப் போட்டிவரை அழைத்து வந்துள்ளனர்.

சென்னை அணி :
2வது முறை கோப்பை வெல்லும் முனைப்பில் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள சென்னை எஃப்சி அணி லீக் தொடரில் புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்திருந்தது.
லீக் போட்டியில் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதோடு, அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது பலமாக பார்க்கப்படுகின்றது.
சென்னை அணியில் ஜேஜே நடப்புத் தொடரில் 9 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
ஐஎஸ்எல் இறுதிப் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்