ஆப்நகரம்

’ரெஸ்லிங்’ நோக்கி படை எடுக்கும் மல்யுத்த வீரர்கள்!

சமீபகாலமாக பணம் சம்பாரிக்க, ‘ரெஸ்லிங்’கை நோக்கி இந்திய மல்யுத்த வீரர்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

TOI Sports 23 Jun 2017, 1:01 pm
புதுடெல்லி: சமீபகாலமாக பணம் சம்பாரிக்க, ‘ரெஸ்லிங்’கை நோக்கி இந்திய மல்யுத்த வீரர்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
Samayam Tamil indian woman wrestler kavita dalal to be part of wwes
’ரெஸ்லிங்’ நோக்கி படை எடுக்கும் மல்யுத்த வீரர்கள்!


இந்திய மல்யுத்த வீரர்கள், பணம் சம்பாதிக்க, தொழில்முறை மல்யுத்தமான டபிள்யூ.டபிள்யூ.இ., (WWE) பக்கம் படை எடுப்பது அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் அரங்கில் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் உட்பட அனைவரும் இதில் பங்கேற்க முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனையான கவிதா தலால், தற்போது இந்த டபிள்யூ.டபிள்யூ.இ., யின் மே யங் கிளாசிக் தொடரில் பங்கேற்கவுள்ளார். பெண்களுக்காக பிரத்யேகமாக நடக்கும் இத்தொடரிம் மொத்தமாக 32 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இவர் ஏற்கனவே டபிள்யூ.டபிள்யூ.இ., புகழ் கிரேட் காலி நடத்தும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ளார். குறிப்பாக போட்டியாளர் விடுத்த சவாலை ஏற்று, சுடிதாருடன் இவர் சண்டையிட்ட வீடியோ வைரலாக பரவியது. தவிர, ஏப்ரல் மாதம் துபாயில் நடந்த டபிள்யூ.டபிள்யூ.இ., தொடரிலும் இவர் பங்கேற்றுள்ளார்.


அங்கு அசத்திய இவர், ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது நடக்கும் போட்டியிலும் அசத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என கவிதா தெரிவித்துள்ளார்.

Indian woman wrestler Kavita Dalal to be part of @WWE’s #MaeYoungClassic tournament

அடுத்த செய்தி

டிரெண்டிங்