ஆப்நகரம்

தங்க மங்கை பி.டி. உஷா பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவுக்கு இன்று பிறந்தநாள்...

Samayam Tamil 27 Jun 2020, 7:59 pm
இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம், ‘இந்தியாவின் தங்க மங்கை’, ‘தடகள நாயகி’, ‘ஆசியத் தடகள ராணி’, ‘தடகள அரசி’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றவர். விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் மங்கைகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக் கூடிய பி.டி.உஷா. இன்று தனது 55ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
Samayam Tamil pt usha


பி.டி. உஷாவின் சாதனைகள்!

பி.டி. உஷா தனது 14ஆவது வயதில் தேசிய அளவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றார். 1976ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 1980ஆம் ஆண்டில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பி.டி. உஷா தடகளப் போட்டியில் 0.01 நொடிகள் பின்தங்கி 5ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவ விட்டார்.

ஆசியப் போட்டிகளில் 1982ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை தடகளப் போட்டிகளில் 13 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 33 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு கௌரவத்தைத் தேடித் தந்துள்ளார். தேசிய அளவில் இவருடைய பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

கௌரவித்த மத்திய அரசு!

பி.டி. உஷாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகப் பலவேறு கௌரவ விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 1983ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1983ஆம் ஆண்டு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக் கழகம் சார்பில் பி.டி. உஷாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சீனிவாசன், மத்திய தொழில்ரக பாதுகாப்புப் படையின் ஆய்வாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முறியடிக்கப்படாத சாதனைகள்!

1985ஆம் ஆண்டு நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 11.39 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 1999ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 23.05 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். 1985ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 51.61 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். பி.டி.உஷாவின் இச்சாதனைகள் தேசிய அளவில் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அன்று பேட்டியளித்த பி.டி. உஷா, ‘நான் சிறந்த ஒலிம்பிக் வீராங்னையாக வர வேண்டும் என விருப்பமில்லை. நான் படைத்த சாதனைகளை நானே முறியடித்து மீண்டும் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்