ஆப்நகரம்

கபடியில் பிரட் லீ: ஈசியாகக் கவிழ்த்த சிறுவர்கள்

ப்ரோ கபடி தொடருக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தோன்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Samayam Tamil 26 May 2018, 2:35 pm
ப்ரோ கபடி தொடருக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் பிரட் லீ தோன்றும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
Samayam Tamil 1527252919-asdasdas


ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக ப்ரோ கபடி லீக் தொடர் தொடங்கவுள்ளது.

இந்தப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிப்பரப்ப உள்ளது. அதற்கான விளம்பர பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிறுவர்களுடன் மல்லுக்கட்டும் ப்ரமோ வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா வீரர் பிரட் லீ, இந்திய வீரர் இர்பான் பதான் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் வீரர் டேரன் சமி ஆகியோர் சிறுவர்களுடன் கபடி விளையாடுகிறார்கள்.

பிரட் லீயின் பிங்கா பாய்ஸ், இர்பான் பதானின் இர்பான் வாரியர்ஸ், சமியின் சமி ஸ்டிரைக்கர்ஸ் என மூன்று அணிகள் களமிறங்கியுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோவில் பிங்கா பாய்ஸ் மற்றும் இர்பான் வாரியர்ஸ் மோதும் போட்டியில், பிரட் லீயை, இர்பான் வாரியர்ஸை சேர்ந்த சிறுவர்கள் அலேக்காக தூக்கி அமுக்குகிறார்கள். ஜாலியான இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்