ஆப்நகரம்

ஜூனியர் உலகக் கோப்பை: தங்கம் வென்றார் முஸ்கான்

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டியில் 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

Samayam Tamil 28 Mar 2018, 9:35 pm
சிட்னி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டியில் 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை முஸ்கான் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Samayam Tamil 85564-mbfgpqvkmn-1522210262


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை முஸ்கான் பன்வாலா கலந்துகொண்டார்.

இறுதிப்போட்டி வரை வெற்றிநடை போட்ட முஸ்கான் இறுதியில் 50ல் 35 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார். இது அவர் பெறும் முதல் சர்வதேச பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பைப் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்திருந்தார்.

இவரது வெற்றியின் மூலம் மூலம் இந்தியாவுக்கு தனிநபர் பிரிவில் 4வது தங்கப்பதக்கமும் மொத்தமாக 9 தங்கப் பதக்கமும் கிடைத்துள்ளது. இத்துடன் 5 வெள்ளி, 8 வெண்கலம் ஆகியவற்றையும் வசப்படுத்திய இந்தியா 22 பதக்கங்களைப் பெற்று, பதக்கப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இடத்தில் உள்ள சீனா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலம் உட்பட 25 பதக்கங்கள் பெற்றிருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்