ஆப்நகரம்

ஊக்கமருந்து குற்றச்சாட்டு-கென்ய விளையாட்டு அதிகாரியிடம் விசாரணை..!

ஊக்கமருந்து அதிகாரிகள் சோதனை நடத்த வருவது குறித்த தகவல்களை, லஞ்சம் பெற்றுக் கொண்டு கென்ய விளையாட்டு வீரர்களுக்கு அளித்ததாக அந்நாட்டின் விளையாட்டுத்துறை அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

TNN 7 Aug 2016, 4:37 pm
ஊக்கமருந்து அதிகாரிகள் சோதனை நடத்த வருவது குறித்த தகவல்களை, லஞ்சம் பெற்றுக் கொண்டு கென்ய விளையாட்டு வீரர்களுக்கு அளித்ததாக அந்நாட்டின் விளையாட்டுத்துறை அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil kenyan athletics manager recalled amid claims of bribery over doping
ஊக்கமருந்து குற்றச்சாட்டு-கென்ய விளையாட்டு அதிகாரியிடம் விசாரணை..!



கென்ய நாட்டு விளையாட்டு அதிகாரியான மேஜர் மைக்கில் ரோடிக் என்பவர்,ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்த வரும் தகவல்களை தங்கள் நாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு முன்னரே தெரிவித்து வந்துள்ளார்.இதற்காக அவர் லஞ்சமும் பெற்றுள்ளார்.இப்படி அவர் லஞ்சம் பெரும் காட்சிகளையும்,உரையாடல்களையும் லண்டனின் பிரபல பத்திரிக்கையான சண்டே டைம்ஸ்,சமீபத்தில் வெளியிட்டது.


மைக்கில் ரோடிக் தகவல் அளித்ததும்,தங்கள் உடலிலிருக்கும் ஊக்கமருந்துக்களுக்கான தடயங்களை நீக்கும் கென்ய வீரர்கள் தொடர்ந்து ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து வந்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ பதிவை கவனத்தில் எடுத்துக் கொண்ட ஊக்க மருந்து தடுப்புக் கழகம் இது குறித்து ரோடிக்கிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.


ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரோடிக்,தன்னை ரகசியமாக படம்பிடிக்க வந்த நிருபர்கள் யார் என்பதை கண்டறிவதற்காக அப்படி பொய் தகவல்களை கூறியதாக தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த விளக்கத்தை ஊக்கமருந்து தடுப்பு கழகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.


பல்வேறு ஊக்கமருந்து புகார்களில் சிக்கிய கென்ய அணிக்கு,கடந்த வெள்ளிக்கிழமைதான் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்