ஆப்நகரம்

ஒலிம்பிக் பதக்கத்திற்காக பழிதீர்த்த மேடிசன் கீஸ் !

சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தகுதி பெற்றார்.

TOI Sports 7 Oct 2016, 7:07 pm
பீஜிங் : சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் தகுதி பெற்றார்.
Samayam Tamil keys beats kvitova in olympic rematch at china open
ஒலிம்பிக் பதக்கத்திற்காக பழிதீர்த்த மேடிசன் கீஸ் !


சீன தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் அசத்திய மேடிசன், முதல் செட்டை, 6-3 என கைப்பற்றினார். இதற்கு இரண்டாவது செட்டை 7-6 என தன்வசப்படுத்திய கிவிட்டோவா பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய மேடிசன், 7-6 என கைப்பற்றினார்.

முடிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை , 6-3, 6-7, 7-6 என வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை இழந்த மேடிசன், கிவிட்டோவாவை பழிதீர்த்துக்க்கொண்டார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்