ஆப்நகரம்

ஹாங் காங் ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் தோல்வி!

காவ்லூன்: ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தொடரில் இருந்து வெளியேறினார்.

Samayam Tamil 16 Nov 2018, 4:23 pm
ஹாங் காங்கின் காவ்லூனில் ஹாங் காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கெண்ட நிசிமோடாவை எதிர் கொண்டார்.
Samayam Tamil 5


இதில் துவக்கம் முதல் சொதப்பலாக செயல்பட்ட ஸ்ரீகாந்த், முதல் செட்டை 17-21 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை,13-21 என ஸ்ரீகாந்த் தவறவிட்டார்.
முடிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் கெண்ட நிசிமோடாவிடம் 17-21 13-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்