ஆப்நகரம்

உலகக்கோப்பை: மாலி, பராகுவே அடுத்த சுற்றுக்கு தகுதி!

17 வயதுக்கு உட்படோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் பராகுவே, மாலி அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

TOI Sports 12 Oct 2017, 7:40 pm
17 வயதுக்கு உட்படோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் பராகுவே, மாலி அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
Samayam Tamil mali paraguay won thier respective matches in u 17 fifa world cup
உலகக்கோப்பை: மாலி, பராகுவே அடுத்த சுற்றுக்கு தகுதி!


இந்தியாவில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நடத்தும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி உட்பட சுமார் 24 சர்வதேச அணிகள் பங்கேற்கிறது.

இதில் டெல்லியில் நடந்த 'குரூப்-பி’ பிரிவின் லீக் போட்டியில் மாலி, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் துவக்கம் முதல் மாலி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

அந்த அணிக்கு சலாம் 18வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதற்கு நியூசிலாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதியில் மாலி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

பின் இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மாலி அணிக்கு, போட்டியின் ஜிமொசா (50), தியாய் (82) மாலி அணிக்கு இரண்டு கோல் அடித்தனர்.

நியூசிலாந்து அணிக்கு ஸ்பாஜ் (72) ஒரு கோல் மட்டும் அடித்தார். இறுதியில் மாலி அணி 3-1 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பராகுவே ’டாப்’:
இதே போல நவி மும்பையில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், பராகுவே, துருக்கி அணிகள் மோதின. இதில் பராகுவே அணிக்கு போகாடா (41), கார்டோஷா (43), காலினோ (61) ஆகியோர் கோல் அடித்தார். இதற்கு கடைசி நிமிடத்தில் துருக்கியின் கீரெம் (90+3) ஒரு கோல் மட்டும் அடித்தார். முடியவில்லை. முடிவில், பராகுவே அணி 3- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த லீக் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்ற பராகுவே, மாலி அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்