ஆப்நகரம்

மும்பை மாரத்தானில் தோனி 2வது இடம்

2017ஆம் ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டியில் தோனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Mumbai Mirror 16 Jan 2017, 5:15 am
மும்பை: 2017ஆம் ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டியில் தோனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
Samayam Tamil mumbai marathon 2017 dhoni comes second in the elite full marathon
மும்பை மாரத்தானில் தோனி 2வது இடம்


2017ஆம் ஆண்டுக்கான மும்பை மாரத்தான் போட்டியில் புனேயைச் சேர்ந்த பகதூர் சிங் தோனி இரண்டாமிடம் பிடித்துள்ளார். அவர் பந்தைய தூரத்தை 2 மணி நேரம் 19 நிமிடம் மற்றும் 57 விநாடிகளில் கடந்தார்.

உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ள தோனி, தான் பெற்றுள்ள இரண்டாவது இடத்தில் திருப்தி இல்லை என்றும் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெறும் இவர், எலாம் சிங், எம்.டி.யூனுஸ் ஆகிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாவதாக வந்திருக்கிறார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ராம் சிங் யாதவை தனது முன்னுதாரணமாகக் கொண்டு பயிற்சி எடுத்துவரும் பகதூர் சிங் தோனி ஒருநாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை சந்திக்கவும் விரும்பம் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்