ஆப்நகரம்

கோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர் பதிவு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: என்பிஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார் என கடந்த 2012 ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது காட்டுத்தீயை விட வேகமாக வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Jan 2020, 8:08 pm
என்.பி.ஏ. கூடைப்பந்தாட்டத்தில் சாம்பியனாக திகழ்ந்தவர் பிரையண்ட் (41 வயது). இவர் இன்று தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் பயணம் செய்த அவரின் 13 வயது மகள் கியானாவும் உயிரிழந்தார். மேலும் அதே ஹெலிகாப்டரில் பயணம் செய்த 9 பேரும் பலியாகினர்.
Samayam Tamil Kobe Bryant


ரசிகர்கள் அதிர்ச்சி
கோப் பிரையண்ட்டின் உயிரிழப்பை கேட்டு அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள கலாபாசஸ் மலையில் ஏற்பட்ட இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஒருவர் கூட தப்பவில்லை என் லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறையினர் உறுதி செய்துள்ளனர்.

வைரலான ட்வீட்
இவரது இறப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2012இல் ஒருவர் என்பிஏ ஜாம்பவான் கோப் பிரையண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார் என வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது காட்டுத்தீயை விட வேகமாக வைரலாகி வருகிறது.


இதுகுறித்து அப்போது அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “கோப் ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிரிழப்பார்” என அதில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து கோப் பிரையண்ட் ரசிகர்கள் அந்த நபரை வசைபாடி வருகின்றனர். ஆனால் அந்த நபரோ அதை தெரியாமல் பதிவு செய்துவிட்டேன் என அழுகாத குறையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்