ஆப்நகரம்

Naomi Osaka: தன் குரு செரினாவையே வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற நயோமி ஒசாகா

23 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை, ஜப்பானின் நயோமி ஒசாகா வீழ்த்தி, யூ.எஸ் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

Samayam Tamil 9 Sep 2018, 10:23 am
23 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸை, ஜப்பானின் நயோமி ஒசாகா வீழ்த்தி, யூ.எஸ் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
Samayam Tamil us open1


உலகின் 19வது தரவரிசையில் உள்ள ஜப்பானின் 20 வயது நயோமி ஒசாகா, 23 முறை டென்னிஸ் கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற 36 வயது செரினா வில்லியம்ஸை வென்று முதன் முறையாக கிராண்ட் சிலாம் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ளார்.

குருவை வீழ்த்திய நயோமி ஒசாகா:
நேற்று நடந்த நயோமி ஒசாகா - செரினா வில்லியம்ஸ் இடையிலான இறுதிப் போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக செரினா வில்லியம்ஸை நயோமி ஒசாகா வீழ்த்தினார்.


நயோமி ஒசாகா கூறும் போது, “செரினா வில்லியம்ஸ் தான் என் டென்னிஸ் குருவாக சிறுவயதிலிருந்து பார்க்கிறேன். அவரை வென்று பட்டத்தை வென்றிருப்பது மிக்க மகிழ்ச்சியும், என் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்