ஆப்நகரம்

புரோ கபடி லீக் 2018: பிரபல கபடி அணிக்கு அம்பாசிடர் ஆனார் நடிகை நீது சந்திரா!

பாட்னா: கபடி அணிக்கு நீதி சந்திரா அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 21 Oct 2018, 4:47 pm
ஐபிஎல் டி20 ஃபார்மேட்டில் கிரிக்கெட் மிகப் பிரபலம் அடைந்தது. இதையடுத்து ஹாக்கி, கால்பந்து, பேட்மிண்டன், கபடி என பல்வேறு விளையாட்டுகள் லீக் தொடர்கள் உருவாக்கப்பட்டன.
Samayam Tamil Neetu Chandra


அதில் புரோ கபடி லீக் மிகவும் பிரபலமானது. தற்போது 6வது சீசன் புரோ கபடி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 7 அக்டோபரில் தொடங்கிய போட்டிகள், வரும் 6 ஜனவரி 2019 வரை நடைபெற உள்ளன.

இந்த தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜய் சேதுபதி அம்பாசிடராக நியமிக்கப்பட்டார்.

இதேபோல் பி பிரிவில் உள்ள பாட்னா பைரேட்ஸ் அணிக்கு பிரபல நடிகை நீது சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Neetu Chandra appointed as Ambassador of Patna Pirates Kabaddi Team.

அடுத்த செய்தி

டிரெண்டிங்