ஆப்நகரம்

சிகிச்சைக்கு வீடு விற்ற குத்துச் சண்டை முன்னாள் ஆசிய சாம்பியன்!!

ஆசிய குத்துச் சண்டை முன்னாள் சாம்பியனும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டிங்கோ சிங் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க பணம் இல்லாமல், தனது சொந்த வீட்டை விற்று மருத்துவம் பார்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 2 Feb 2017, 1:47 pm
ஆசிய குத்துச் சண்டை முன்னாள் சாம்பியனும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டிங்கோ சிங் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க பணம் இல்லாமல், தனது சொந்த வீட்டை விற்று மருத்துவம் பார்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil padma shri awardee dingko singh sold his home to pay for cancer treatment
சிகிச்சைக்கு வீடு விற்ற குத்துச் சண்டை முன்னாள் ஆசிய சாம்பியன்!!

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேங்க்கோம் டிங்கோ சிங். வயது 38. ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச் சண்டைப் பிரிவில் சாம்பியன் பெற்றவர். பாங்காங்கில் நடந்த விளையாட்டில் பங்குபெற்று நாடு திரும்பிய இவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனை சென்று சோதித்தபோது, இவரது பித்தநீர் பையில் புற்று நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது. ஜனவரி முதல் வாரம் வரையிலான சிகிச்சையில் இவரது பித்தநீர் பை 70 சதவீதம் நீக்கப்பட்டது.

தொடர்ந்து எடுத்துக் கொண்ட சிகிச்சைக்கு இதுவரை டிங்கோ ரூ. 10 லட்சம் செலவழித்து, இனிமேலும் செலவழிக்க பணம் இல்லை என்ற நிலையில் தனது சொந்த வீட்டை விற்று, சிகிச்சை எடுத்துக் கொண்டு, தனது நண்பர் வீட்டில் மனைவியுடன் தங்கி வருகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிங்கோ, ''நான் சாம்பியன் பட்டம் பெற்று வந்தபோது எனக்கு அனைவரும் சல்யூட் அடித்தனர். தற்போது, என் நிலைமையை கண்டு கொள்ள யாரும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Padma Shri awardee Dingko Singh sold his home to pay for cancer treatment

அடுத்த செய்தி

டிரெண்டிங்