ஆப்நகரம்

கொரிய ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் காஷ்யப்!

இன்சியான்: கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப் முன்னேறி அசத்தினார்.

Samayam Tamil 27 Sep 2019, 2:42 pm
கொரியாவின் இன்சியானில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரான காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஜார்ஜென்சனை எதிர்கொண்டார்.
Samayam Tamil parupalli kashyap


இதில் துவக்கம் முதல் அசத்திய காஷ்யப், முதல் செட்டை 24-22 என கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய காஷ்யப் 21-8 என மிகச்சுலபமாக தன்வசப்படுத்தினார்.

இறுதியில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரான காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஜார்ஜென்சனை, 24-22, 21-8 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில், இந்தியாவின் காஷ்யப், ஜப்பானின் கெண்டோவை எதிர்கொள்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்