ஆப்நகரம்

கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய விராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

TNN 16 Sep 2017, 1:25 pm
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய விராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
Samayam Tamil pv sindhu beats he bingjiao 21 10 17 21 21 16 in semis sets up summit clash with nozomi okuhara
கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி


தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் ரியோ ஒலிம்பிங் வெள்ளி மங்கை பி.வி.சிந்து இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவுடன் மோதினார்.

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய சிந்து 21–10 என முதல் செட்ட வசப்படுத்தினார். அடுத்த செட்டை பிங்ஜியோவுடன் நடைபெற்ற கடும் போராட்டத்திற்குப் பின் 17–21 என இழந்தார். பின்னர், மூன்றாவது செட்டில் இருவரும் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசியில் ஆதிக்கம் செலுத்திய சிந்து அந்த செட்டையும் தனதாக்கி 21–16 என வென்றார்.
#KoreaSS @Pvsindhu1 beats He Bingjiao 21-10, 17-21, 21-16 in semis, sets up summit clash with Nozomi Okuhara pic.twitter.com/RpXET54Y0C — TOI Sports (@toisports) September 16, 2017 இறுதியில், 21–10, 17–21, 21–16 என்ற செட் கணக்கில் அரையிறுதியில் வென்ற சிந்து இறுதிப்போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ளார். இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின் நயோமியை எதிர்கொள்ள இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்