ஆப்நகரம்

ஹாங்காங் ஓபன் : ஃபைனலில் சிந்து தோல்வி!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி .வி.சிந்து தோல்வியடைந்தார்.

TOI Sports 26 Nov 2017, 2:16 pm
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி .வி.சிந்து தோல்வியடைந்தார்.
Samayam Tamil pv sindhu lose in final against hongkongopen2017
ஹாங்காங் ஓபன் : ஃபைனலில் சிந்து தோல்வி!


ஹாங்காங்கின் கவ்லீன் பகுதியில் ஹாங்காங் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் சிந்து, சீன தைபேவின் தாய் சு யிங்கை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் சிந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் முதல் செட்டை 18-21 என கோட்டைவிட்ட சிந்து, அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இந்த செட்டையும் 18-21 என சிந்து தவறிவிட்டார்.

முடிவில், இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேவின் தாய் சு யிங்கிடம் 18-21, 18-21 என தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்