ஆப்நகரம்

ஃபார்முலா-1 : ரிக்கார்டோ முதலிடம், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஹாமில்டன்!

மெக்சிகோ சிட்டி: ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் மெக்சிகோ கிராண்ட் பிரிக்ஸ் தகுதிச்சுற்றில் ரெட்புல் வீரர் ரிக்காட்டோ முதலிடம் பிடித்தார். மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Samayam Tamil 28 Oct 2018, 5:02 pm
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 19வது சுற்றுக்கான ஃபைனல் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி, இன்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடந்தது.
Samayam Tamil 1


ஹாமில்டன் ஏமாற்றம்.....
இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில் உள்ள மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் போல் இடங்களுக்கான போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ரெட்புல் வீரர் டேனியல், 16 சுற்றுகள் கொண்ட போட்டியில் பந்தய எல்லையை 1.14.759 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்தார்.

மற்றொரு ரெட்புல் வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாபன் 1.14.785 இரண்டாவது இடம் பிடித்தார். சாம்பியன்ஷிப் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் நம்பர்-1 இடத்தில் உள்ள, மெர்சிடஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடம் பிடித்தார். பெராரி அணியின் நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் (1:14.970 ) நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதன் ஃபைனல் போட்டி நாளை நடக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்