ஆப்நகரம்

ஸ்டட்கர்ட் ஓபனில் சாம்பியன்: முதலிடத்தைத் தக்கவைத்தார் பெடரர்

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கனடாவின் மிலோஸ் ரோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

Samayam Tamil 17 Jun 2018, 11:53 pm
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கனடாவின் மிலோஸ் ரோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
Samayam Tamil 64623680


ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனியில் கடந்த 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கனடாவின் மிலோஸ் ரோனிக்கை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டையும் 7-6(3) என தன்வசப்படுத்தினார்.

இதன் மூலம் 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் வென்ற பெடரர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். இந்த வெற்றியுடன் தரவரிசையில் முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளார். மேலும், திங்கட்கிழமையன்று 310 வாரங்கள் முதலிடத்தை ஆக்கிரமித்த சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பும் பெற்றுள்ளார்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்