ஆப்நகரம்

இன்னும் 10 வருசத்துக்கு போகமாட்டேன்!

சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து இன்னும் 10 ஆண்டுகள் விளையாடவுள்ளதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

TOI Sports 8 Nov 2016, 8:57 am
மாட்ரிட்: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து இன்னும் 10 ஆண்டுகள் விளையாடவுள்ளதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ronaldo i want to play until i am 41
இன்னும் 10 வருசத்துக்கு போகமாட்டேன்!


ஸ்பெயினில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடரான லா லிகா தொடரின், ரியல் மாட்ரிட் அணிக்காக போர்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறஸ்டியானோ ரொனால்டோ சாதனை தொகைக்கு கடந்த 2009ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரின் ஒப்பந்தம் வரும் 2018ல் முடிகிறது. இந்நிலையில் இவரது ஒப்பந்தம் வரும் 2021 வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முறைப்படி, சாண்டியாகோ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. ரியல் மாட்ரிட் அணிக்காக வரும் 30 ஜூன் 2021 வரை பங்கேற்க ஒரு பம்பர் தொகையை, மீண்டும் ரொனால்டோ கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரொனால்டோ கூறியது:
ரியல் மாட்ரிட் அணியுடனான எனது ஒப்பந்தத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளேன். ஆனால் இது முடிவல்ல, எனது 41 வயது வரை விளையாட திட்டமிட்டுள்ளேன். அதற்கு இன்னும் 10 ஆண்டுகள் உள்ளது. நான் ரியல் மாட்ரிட் அணியிலேயே தொடருவேனா என தெரியாது. ஆனால் தற்போது உள்ளேன். இருக்கும் வரை எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்