ஆப்நகரம்

எனது பெற்றோருடைய தியாகங்களால்தான் நான் இந்த நிலையில் உள்ளேன்: பி.வி சிந்து

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக திகழும் பி.வி.சிந்து, தனது பெற்றோருடைய தியாகங்களால்தான் தான் இந்த அளவிற்கு சாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

TNN 27 Dec 2017, 4:52 pm
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையாக திகழும் பி.வி.சிந்து, தனது பெற்றோருடைய தியாகங்களால்தான் தான் இந்த அளவிற்கு சாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sacrifices by parents have made me what i am pv sindhu
எனது பெற்றோருடைய தியாகங்களால்தான் நான் இந்த நிலையில் உள்ளேன்: பி.வி சிந்து


இந்தியாவின் சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இன்று வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு முன்னுதாரமாக விளங்கும் பி.வி.சிந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தான் கடந்து வந்த பாதைகளை விவரித்தார்.

அப்போது பேசிய அவர், “பல தடைகள் இருந்தன. ஆனால், எனது பெற்றோர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தனர். எனக்கு ஏதாவது வேண்டுமென்றாலும் சரி, பயிற்சிக்குக் எங்காவது செல்ல வேண்டும் என்றாலும் சரி, அவர்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். எனது பெற்றோரின் கடின உழைப்பும், அவர்கள் செய்த தியாகங்களுமே நான் இன்று இந்த நிலைமையில் இருக்கக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
Sacrifices by parents have made me what I am, says @Pvsindhu1 Details:👉https://t.co/40IABPeTvy@BAI_Media pic.twitter.com/w46LDKyI8h — Times of India (@timesofindia) December 27, 2017 தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு ஓய்வு கிடைக்கும்போது பெரும்பாலான நேரங்களில் வெளியே எங்காவது சுற்றுலா செல்வதற்கும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்குமே சரியாக இருக்கும். இது தவிர நேரம் இருந்தால், வீட்டில் ஓய்வெடுப்பேன், குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியின் போது பி.வி,சிந்துவின் பயிற்சியாளரான பி.கோபிசந்துவும் உடனிருந்தார். பேட்டியின்போது, தனது பயிற்சியாளர் கோபிசந்த் அவர்கள்தான் தனக்கு முன்மாதிரி என்று சிந்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்