ஆப்நகரம்

சீன ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து; சாய்னா வெளியேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் தோல்வியடைந்து சாய்னா வெளியேறினார்.

TNN 17 Nov 2016, 2:24 am
புஷுவ்: சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் தோல்வியடைந்து சாய்னா வெளியேறினார்.
Samayam Tamil saina nehwal crashes out in opening round of china open
சீன ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் சிந்து; சாய்னா வெளியேற்றம்


சீனாவின் புஷுவ் நகரில் 2016ஆம் ஆண்டின் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, சாய்னா நேவால், அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரன்னாய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, சீனாவின் சியாஹ்சின் லீயை எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய சிந்து, 21-12, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் சாய்னா நேவால், தாய்லாந்தின் போர்ண்டிப் புரானாபிரேசர்ட்சக் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 16-21 என்ற புள்ளி கணக்கில், சாய்னா முதல் செட்டை இழந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சாய்னா, 21-19 என 2வது செட்டைக் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 14-21 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்தார். இதனால் போட்டியில் தோல்வியுற்று, சாய்னா நேவால் தொடரில் இருந்து வெளியேறினார்.

இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம், சீனாவின் ஷு சியானுடன் மோதினார். இதில் 21-19, 20-22, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். மேலும் பிரன்னாய், ஹாங்காங்கின் கா லாங் ஆன்குஸ் உடன் மோதினார். இதில் 21-13, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

China Open: Saina Nehwal crashes out in opening round; PV Sindhu, Ajay Jayaram progress.

அடுத்த செய்தி

டிரெண்டிங்