ஆப்நகரம்

எனது தந்தை பெருமைப்படக்கூடிய தருணம்: பட்டமளிப்பு விழாவில் சாய்னா நெகிழ்ச்சி

தனது தந்தை பெருமைப்படக்கூடிய தருணம் என்று டாக்டர் பட்டம் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

TNN 16 Oct 2016, 11:42 pm
சென்னை: தனது தந்தை பெருமைப்படக்கூடிய தருணம் என்று டாக்டர் பட்டம் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil saina nehwal gets honorary doctorate says her father will be proud of her
எனது தந்தை பெருமைப்படக்கூடிய தருணம்: பட்டமளிப்பு விழாவில் சாய்னா நெகிழ்ச்சி


சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த விழாவில் பேசியா சாய்னா, தன்னை நினைத்து தனது தந்தை மிகவும் பெருமையடைவார் என்று குறிப்பிட்டார். அவர் ஒரு விஞ்ஞானி என்றும், தான் மருத்துவர் ஆக வேண்டும் என்று விரும்பியதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது தாயார் ஒலிம்பியனாக உருவாக வேண்டும் என்று விரும்பியுள்ளதாக கூறினார்.

மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள சாய்னா நேவால், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் மூட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், தற்போது முழு ஆரோக்கியத்துடன் விளையாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விழாவில் முன்னாள் சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கலந்து கொண்டு, சாய்னாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

Saina Nehwal gets honorary doctorate, says her father will be proud of her as he wanted her to be a doctor.

அடுத்த செய்தி

டிரெண்டிங்