ஆப்நகரம்

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் ஏமாற்றம்: முதல் சுற்றிலேயே வெளியேறினார்!

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.

Samayam Tamil 18 Sep 2019, 9:21 am
சீனாவின் சாங்ஹாவுல் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தாய்லாந்தின் புஷானனை எதிர்கொண்டார்.
Samayam Tamil saina Nehwal


இதில் துவக்கம் முதல் சாய்னா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் முதல் செட்டை 10-21 என சாய்னா இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் படு சொதப்பலாக விளையாடிய சாய்னா, 17-21 என போராடி கோட்டைவிட்டார்.

இறுதியில், இந்தியாவின் சாய்னா நேவால், தாய்லாந்தின் புஷானிடம் 10-21, 17-21 என்ற செட்களில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்