ஆப்நகரம்

ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றில் சாய்னா சொதப்பல்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்து வெளியேறினார்.

TNN 23 Nov 2017, 9:07 pm
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை தோல்வியடைந்து வெளியேறினார்.
Samayam Tamil saina nehwal lost to chinas chen yufei 21 18 19 21 10 21 in a second round of hong kong open
ஹாங்காங் ஓபன்: 2வது சுற்றில் சாய்னா சொதப்பல்


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் விளையாடினார். சீனாவின் சென் யூஃபியை எதிர்கொண்டு களமிறங்கினார்.

இதில் முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார் சாய்னா. ஆனால் அடுத்தடுத்த செட்களில் பதிலடி கொடுத்த சீன வீராங்கனை சென் இரண்டாவது செட்டை 19-21 என்றும் மூன்றாவது செட்டை 10-21 என்றும் தனதாக்கினார்.

இறுதியில் சாய்னா 21-18, 19-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்