ஆப்நகரம்

எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய சானியா !

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

TNN 16 Nov 2017, 11:03 am
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று தனது 31-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
Samayam Tamil sania mirza celebrates her birthday with family
எளிமையான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய சானியா !


இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு நேற்று 31-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார்.

சானியா மிர்சாவுக்கு அவரது கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ‘பிறந்த நாள் காணும் எனது அழகிய மனைவிக்கு வாழ்த்துகள். இந்த தருணத்தில் அவருடன் இருக்க முடியாததை நினைத்து வருந்துகிறேன்’.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ்ரெய்னா உள்பட பல பிரபலங்கள் பலரும் சானியா மிர்சாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் இரட்டையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 பட்டங்களையும், கலப்பு இரட்டையரில் 3 பட்டங்களையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்