ஆப்நகரம்

காயமடைந்த ஷரபோவா ரோம் போட்டியிலிருந்து விலகில்!

ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக இரண்டாம் சுற்றில் விலகினார். இதனால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.

Samayam Tamil 17 May 2017, 10:04 am
ரோம் : ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக இரண்டாம் சுற்றில் விலகினார். இதனால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
Samayam Tamil sharapova retires hurt in rome wimbledon
காயமடைந்த ஷரபோவா ரோம் போட்டியிலிருந்து விலகில்!


சர்வதேச டென்னிஸ் அரங்கில் முன்னணி வீராங்கனையாக இருந்தவர் ரஷ்யாவின் மரியா ஷரபோவா. பிரஞ்சு ஓபன் டென்னிஸில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இவர், சமீபத்தில் மீண்டு வந்தார்.

ஆனால் இவரால் பிரஞ்சு ஓபனில் அவர் பங்கேற்க முடியவில்லை. இதன் விளைவாக உலகத் தரவரிசையில் 211வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ரோம் டென்னிசில் இவர் இரண்டாவது சுற்றில் குரேஷிய வீராங்கனை லூசிக் பரோன் விளையாடியபோது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் போட்டியில் முன்னிலையில் இருந்த போதும் விலகினார்.

இப்போடியில் ஷரபோவா அரையிறுதி வரை சென்றிருந்தால் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும் சர்வதேச தர வரிசைப்பட்டியலில் 200 இடங்களுக்குள் வந்துள்ளதால் விம்பிள்டன் தொடரில் பங்கேற்க வாய்ப்புமுள்ளது.

The five-time major tournament winner Maria Sharapova will not be granted a wild-card entry into the French Open, the president of the French Tennis Federation, Bernard Giudicelli, announced Tuesday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்