ஆப்நகரம்

ஒலிம்பிக் போட்டிக்கு ஷிவா தாபா தகுதி; மேரி கோம் ஏமாற்றம்!

இந்திய குத்துச்சண்டை வீரரான ஷிவா தாபா, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளார். அதேசமயம், மகளிர் பிரிவில் மேரி கோம் ஒலிம்பிக் வாய்ப்பை, இழந்துள்ளார்.

CNN 31 Mar 2016, 8:22 pm
இந்திய குத்துச்சண்டை வீரரான ஷிவா தாபா, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளார். அதேசமயம், மகளிர் பிரிவில் மேரி கோம் ஒலிம்பிக் வாய்ப்பை, இழந்துள்ளார்.
Samayam Tamil shiva thapa qualifies for olympic games heartbreak for mary kom
ஒலிம்பிக் போட்டிக்கு ஷிவா தாபா தகுதி; மேரி கோம் ஏமாற்றம்!


பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்பவர்களுக்கான, தகுதிப் போட்டி சீனாவில் நடக்கிறது. இதில், ஆடவருக்கான 56 கிலோ பிரிவில், இந்தியாவின் ஷிவா தாபா கஜகஸ்தானை சேர்ந்த கைரத்தை தோற்கடித்தார். இதன்மூலமாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

அதேசமயம், மகளிர் 51 கிலோ பிரிவில், இந்தியாவின் மேரி கோம், சீனாவின் ரென் கன்கனிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை, மேரி கோம் இழந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்