ஆப்நகரம்

முதல் சர்வதேச பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை..!

இந்திய இளம் பேட்மிண்டன் வீராங்கனையான புர்வா பர்வே, தனது முதல் சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார்.

TNN 27 Mar 2017, 12:53 am
இந்திய இளம் பேட்மிண்டன் வீராங்கனையான புர்வா பர்வே, தனது முதல் சர்வதேச பட்டத்தை வென்றுள்ளார்.
Samayam Tamil shuttler purva barve wins her first international title
முதல் சர்வதேச பட்டத்தை கைப்பற்றியுள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை..!


இஸ்ரேல் நாட்டில் உள்ள ரிஷான் லீசியன் பகுதியில் “லீ நிங்-இஸ்ரேல் ஓபன் -2017” என்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் சர்வதேச அளவில் 70 வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை புர்வா பர்வே கலந்து கொண்டார்.

இந்த தொடரின் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வந்த புர்வே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலகின் 61-ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லீலா மினாட்ஸுடன் மோதினார்.

வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டியில் , 21-6,21-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யா வீராங்கனையை புர்னே வீழ்த்தி, தனது முதல் ஜூனியர் சர்வதேச பட்டத்தை கைப்பற்றினார்.

அதே போல் 15 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த டோபியுடன் மோதிய இந்திய வீரர் வருண், 21-10, 21-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தனது இரண்டாவது சர்வதேச பட்டத்தை வென்றார்.

Shuttler Purva Barve wins her first international title

அடுத்த செய்தி

டிரெண்டிங்