ஆப்நகரம்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கு ஆதரவளிக்கும் சிந்து!

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

TOI Sports 11 Oct 2017, 9:08 pm
புதுடெல்லி: மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sindhu to support campaign for breast cancer awareness
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கு ஆதரவளிக்கும் சிந்து!


கடந்த 2016ல் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து. தற்போதும் பேட்மிண்டன் அரங்கில் முன்னணி இந்திய வீராங்கனையாக உள்ளார்.

இவர் மும்பையின் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை புற்றுநோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த அந்த மருத்துவமனை நிர்வாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிந்து கூறுகையில்,’ பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக இந்த நிறுவனத்துடன் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் 28ல் ஒரு பெண் இந்த மார்பக புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். அது அவர்களுக்கு இருப்பது தெரியாமலே அவர்கள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலை இனி மாற வேண்டும். ‘ என்றார்.

NEW DELHI: Olympic silver medallist PV Sindhu will support the Bridgestone Pink Valve Cap Donation Drive Campaign to create awareness about breast cancer.

அடுத்த செய்தி

டிரெண்டிங்