ஆப்நகரம்

வரும் 29ம் தேதி முதல் "சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை" ஹாக்கி தொடர்

ஆடவருக்கான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

TOI Contributor 25 Apr 2017, 5:48 pm
ஆடவருக்கான சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஒன்று நடத்தப்பட்ட இந்தத் தொடர், 1998-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil sultan azlan shah cup 2017
வரும் 29ம் தேதி முதல் "சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை" ஹாக்கி தொடர்


இதனையடுத்து, 26-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோப் நகரில் வருகின்ற ஏப்ரல் 29-ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக, சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணி தேர்வுசெய்யப்பட்டு அவர்கள் மலேசியா புறப்பட்டு சென்றுள்ளனர். ஸ்ரீஜேஷ் கேப்டனாகவும், துணை கேப்டனாக, மன்ப்ரீட் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ள்னர்.

போட்டின் முதல் நாளில் இந்திய அணி, பிரட்டனை எதிர்கொள்கிறது. அடுத்து 30ம் தேதி நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்