ஆப்நகரம்

கால்பந்தில் முத்திரை பதித்த இந்திய கேப்டன் சுனில்

கால்பந்து உலகில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியிலில் இங்கிலாந்தின் ரூனியை முந்தி 4வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்திய வீரர் சுனில் செட்ரி.

TOI Sports 18 Jun 2017, 12:43 pm
கால்பந்து உலகில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியிலில் இங்கிலாந்தின் ரூனியை முந்தி 4வது இடத்தைப் பிடித்துள்ளார் இந்திய வீரர் சுனில் செட்ரி.
Samayam Tamil sunil chhetri surpasses wayne rooney as fourth highest active intl scorer
கால்பந்தில் முத்திரை பதித்த இந்திய கேப்டன் சுனில்


ஆசியக் கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் பெங்களூரில் ஆட்டத்தில் கிர்கிஸ்தான் அணியை செவ்வாய்க்கிழமை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பலத்த போட்டிக்கு மத்தியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலை நீடித்தது. 69வது நிமிடத்தில் ஜிஜி துணையுடன் பந்தை விரட்டிச் சென்ற இந்திய கேப்டன் சுனில் செட்ரி அபாரமாக பந்தை விரட்டிச் சென்று கோல் போட்டார்.



இதன் மூலம் தனது 54வது கோலை பதிவுசெய்த அவர் சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்தின் வைய்ன் ரூனியை (53 கோல்கள்) பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

முதல் மூன்று இடங்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (73), லியோனல் மெஸ்ஸி (58), க்ளிண்ட் டெம்ப்ஸி (56) ஆகியோர் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்