ஆப்நகரம்

Hockey: ஹாக்கி பி பிரிவில் பட்டையை கிளப்பிய தமிழகம் : கோப்பை வென்று அசத்தல்

தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Samayam Tamil 20 Jan 2019, 7:34 pm
சென்னை : தேசிய சீனியர் ஹாக்கி பி பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Samayam Tamil hockey


9வது சீனியர் பி பிரிவு ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைப்பெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் மத்திய தலைமை செயலகம் அணிகள் போட்டியிட்டன.

இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 3 மணிக்கு நடைப்பெற்றது.

இதில் தமிழக அணி 4-3 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இம்மாத இறுதியில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடக்க உள்ள ‘ஏ’ டிவிஷன் ஹாக்கி தொடரில் தேசிய சீனியர் ஹாக்கி போட்டிக்கு தமிழகம் மற்றும் மத்திய தலைமை செயலக அணிகள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்