ஆப்நகரம்

Asian Youth Athletics: ஆசிய இளைஞர் தடகளம் சென்னை வீராங்கனை தபிதா 2 தங்கம் வென்று சாதனை

ஆசிய இளைஞர் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தபிதா 2 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2019, 2:49 pm
ஹாங்காங்: ஆசியா அளவிலான இளைஞர் தடகள போட்டியில் சென்னையை சேர்ந்த +1 மாணவி இரண்டு தங்கம் வென்று சாதித்துள்ளார்.
Samayam Tamil Tabitha


ஹாங்காங்கில் ஆசியா அளவிலான இளைஞர் தடகள போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் இந்தியா சார்பாக கலந்து கொண்டுள்ள தமிழகத்தை சேர்ந்த தபிதா தடகள போட்டியில் இரு தங்கம் வென்றுள்ளார்.

நேற்று முன் தினம் நடந்த 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தபிதா 13.86 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் மயூகோ 2வது மற்றும் சீனாவின் சின்யூ 3வது இடத்தை பிடித்தனர்.


நேற்று நீளம் தாண்டும் போட்டியில் தபிதா 5.86 மீட்டர் தூரம் தாண்டி தங்க பதக்கத்தை வென்று அசத்தி உள்ளார்.
சீனாவின் ஹுவா ஷிஹு (5.76மீ), இந்திய வீராங்கனை அம்பிகா நர்ஸாரி (5.73மீ) தாண்டி முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர்.



தபிதா சென்னை செயிண்ட் ஜோசப் விளையாட்டு அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றார். இவர் சென்னை விருகம்பாக்கட்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வருகின்றார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுனராக உள்ளார்.

12 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஆசிய இளையோர் போட்டியில் இந்தியா 7 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் வென்று முதலிடத்தில் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்