ஆப்நகரம்

எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்; சரக்கடித்து மாட்டிக் கொண்ட டைகர் உட்ஸ்...!

போதையில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கைதானார்.

TNN 30 May 2017, 8:50 am
புளோரிடா: போதையில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் கைதானார்.
Samayam Tamil tiger woods arrested on suspicion of dui blames prescriptions
எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்; சரக்கடித்து மாட்டிக் கொண்ட டைகர் உட்ஸ்...!


கோல்ப் விளையாட்டு உலகில் முடி சூடா மன்னராக திகழ்ந்தவர் டைகர் உட்ஸ். அவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார். பல பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அவர்களால் ஏராளமான பணத்தை இழந்தார். இந்த காரணங்களால் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து தவித்தார். தொடர்ந்து தனிப்பட்ட வாழ்வில் மிகவும் பாதிக்கப்பட்ட சூழலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் புளோரிடா மாகாணத்தின் ஜூபிடர் நகரில் நேற்று காரை ஓட்டிச் சென்றுள்ளார். தாறுமாறாக ஓடிய காரை தடுத்து நிறுத்தி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டைகர் உட்ஸ் போதையில் இருந்து தெரியவந்தது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நல பாதிப்பால் அவதிப்பட்ட வந்த அவர், மருந்துப் பொருட்கள் எடுத்து வருகிறார். இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக மது உட்கொண்டதாக அவர் போலீசிடம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட போது, எடுக்கப்பட்ட டைகர் உட்ஸின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Golfer Tiger Woods, arrested on Memorial Day in Florida on suspicion of driving under the influence, said alcohol was not involved and he had "an unexpected reaction to prescribed medications."

அடுத்த செய்தி

டிரெண்டிங்