ஆப்நகரம்

உலக உடல் ஊனமுற்றோர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!

19வது உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியானது ஜூன் 27ம்தேதி முதல் ஜுலை 6ம்தேதி வரை சுலோவாக்கிய நாட்டில் ரூசோம்பர்க் நகரில் நடைபெற்றது.

Samayam Tamil 8 Jul 2019, 8:53 pm
உலக உடல் ஊனமுற்றோர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கப்பதக்கம் வென்ற ஜெனிட்டா ஆண்டோவிற்கு விமானநிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil உலக உடல் ஊனமுற்றோர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!
உலக உடல் ஊனமுற்றோர் செஸ் போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை!


19வது உலக உடல் ஊனமுற்றோர் தனிநபர் செஸ் போட்டியானது ஜூன் 27ம்தேதி முதல் ஜுலை 6ம்தேதி வரை சுலோவாக்கிய நாட்டில் ரூசோம்பர்க் நகரில் நடைபெற்றது. 13நாடுகளிலிருந்து சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 11சர்வதேச டைட்டில் பெற்ற வீரர், வீராங்கணைகள் உள்ளிட்ட 44மாற்றுதிறன் கொண்ட வீரர், வீராங்கணைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் திருச்சி வீராங்கனை ஜெனிட்டா ஆண்டோ கலந்துகொண்டு 9சுற்றுகளில் 5ல் வெற்றிபெற்று 2ல் சமன்செய்தும் 2 போட்டிகளில் தோல்வி என்கிற அடிப்படையில் 9-5 புள்ளிகள் பெற்று பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இவர் 6வதுமுறையாக தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு பெருமைசேர்த்த தங்கமகளை திருச்சி விமான நிலையத்தில் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கடந்த முறையைவிட இந்த முறை சற்று போட்டி கடினமாக இருந்ததாகவும், இருந்தாலும் முயற்சிசெய்து தொடர்ந்து 6வது முறையாக வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என ஜெனிட்டா உற்சாகத்துடன் கூறினார்.

அடுத்து அஸ்ஸர் பேஷன் நாட்டில் செப்டம்பரில் நடைபெறும் செஸ் ஒலிம்பியா போட்டியில் மாற்றுதிறனாளிகள் பிரிவில் இந்தியா சார்பில் தாம் பங்கேற்க்க போவதாக மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். மேலும் 2022ம் ஆண்டு ஏசியன் போட்டியில் அதிக மெடல்களை வாங்குவதே எனது விருப்பம் என தெரிவித்தார்..

அடுத்த செய்தி

டிரெண்டிங்