ஆப்நகரம்

இது 42 ஆண்டு வரலாறு .... தங்கமங்கை சிந்துவுக்கு குவியும் பாராட்டு!

பசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Samayam Tamil 25 Aug 2019, 7:24 pm
சுவிட்சர்லாந்தின் பசலில், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் ஃபைனலில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானின் ஒகுஹாராவை 21-7, 21- என்ற செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
Samayam Tamil PV Sindhu


முதல் இந்தியர்:
இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து. தவிர, இத்தொடரில் சிந்து, இந்தியாவிற்கு ஐந்தாவது முறையாக பதக்கம் வென்று சாதித்தார்.

3 ஆண்டுக்கு ஒருமுறை:
கடந்த 1977ல் முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடத்தப்பட்டது. அப்போது முதல் கடந்த 1983 வரை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தான் இத்தொடர் நடந்தது.


தொடர்ந்து கடந்த 1985 முதல் 2005 வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இத்தொடர் நடந்தது. பின் 2006 முதல் ஆண்டுதோறும் இத்தொடர் நடந்தப்பட்டு வருகிறது.

42 ஆண்டில் முதல் முறை:
இந்த 42 ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய என்ற வரலாறு படைத்த சிந்துவுக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அதில் சில....




.

அடுத்த செய்தி

டிரெண்டிங்