ஆப்நகரம்

மொனாக்கோவை மெர்சலாக்கிய மின்னல் மனிதன் போல்ட்!

டைமண்ட் லீக் தடகளத்தின் 100 மீ., ஓட்டத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார்.

TOI Sports 22 Jul 2017, 12:54 pm
மொனாக்கோ: டைமண்ட் லீக் தடகளத்தின் 100 மீ., ஓட்டத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார்.
Samayam Tamil usain bolt goes sub 10sec in monaco 100m
மொனாக்கோவை மெர்சலாக்கிய மின்னல் மனிதன் போல்ட்!


உலகின் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட். இவர் பீஜிங் (2008), லண்டன் (2012), ரியோ (2016) என ஒலிம்பிக் அரங்கில் 100 மீ., ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தியவர். தவிர, இதே ஒலிம்பிக்கில் 200 மீ, 4*100 மீ., ஓட்டத்திலும் மூன்று முறையும் தங்கம் வென்றிருந்தார். ஆனால் இவரது அணி வீரர் செய்த தவறால், இவரது ஒரு 4*100 மீ ஒலிம்பிக் தங்கம் பறிபோனது.

தடகளத்தில் வீழ்த்த முடியாத நாயகனாக ஜொலித்த போல்ட், 100., மீ., ஓட்டத்தில் உலகசாதனை, ஒலிம்பிக் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்நிலையில் மொனாக்கோவில் நடந்த டைமண்ட் லீக் தடகளத்தில் பங்கேற்ற போல்ட், 100 மீ., ஓட்டத்தில், 9.95 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து அமெரிக்காவின் இஷாய் யங் (9.98) இரண்டாவது இடமும், தென் ஆப்ரிக்காவின் அகானி சிம்பைன் (10.02) மூன்றாவது இடம் பிடித்தனர்.

இதன் மூலம் இந்தாண்டில் பங்கேற்ற 100 மீ ஓட்டத்தில் முதல் முறையாக 10 வினாடிகளுக்கு குறைவாக எடுத்துக்கொண்டார் போல்ட். தவிர, டைமண்ட் லீக்கில் இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்காவின் யங் போல்ட்டை விட கூடுதலாக 0.03 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.

MONACO: Jamaican sprint superstar Usain Bolt ran a season's best of 9.95 seconds to win the 100m at Friday's Diamond League in Monaco.

அடுத்த செய்தி

டிரெண்டிங்