ஆப்நகரம்

இந்திய குத்துச்சண்டை வீரர் விரேந்திர் சிங் 10வது தொடர் வெற்றி

தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் ஜொலித்து வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் விரேந்திர சிங் தனது 10வது தொடர் வெற்றியை பெற்றுள்ளார்.

TOI Sports 24 Dec 2017, 1:10 pm
தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் ஜொலித்து வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் விரேந்திர சிங் தனது 10வது தொடர் வெற்றியை பெற்றுள்ளார்.
Samayam Tamil vijender singh defends 2 titles with his 10th successive win
இந்திய குத்துச்சண்டை வீரர் விரேந்திர் சிங் 10வது தொடர் வெற்றி


2008ல் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங், கடந்த 2015 அக்டோபர் மாதத்திலிருந்து தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் விளையாடிய 10 குத்துச் சண்டை போட்டிகளிலும் வென்று சாதனை படைத்து வருகின்றார்.

முதல் 6 போட்டிகள் வெளிநாடுகளில் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைப்பெற்ற கடைசி 4 போட்டிகளில் விரேந்திர சிங்குக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

நேற்று ஜெய்பூரில் நடந்த 10 சுற்றுகள் கொண்ட போட்டியில் கானா வீரர் எர்நெஸ்ட் அம்ஜுவுக்கு எதிராக நடந்த போட்டியில், விரேந்தர் சிங் 10-0 என அபாரமாக வெற்றி பெற்றார். போட்டிக்கு முன்னர் கானா வீரர் எர்நெஸ்ட் அம்ஜு விரேந்தர் சிங்கை நாக்கவுட் முறையில் வீழ்த்துவேன் என கூறியிருந்தார்.
இதன் மூலம் விளையாடிய 10 போட்டிகளிலும் வென்று 100% வெற்றி பெற்று வரும் தொழில் முறை குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை விரேந்திர் சிங் பெற்றுள்ளார்.

Indian professional boxer Vijender Singh defeated Ghana's Ernest Amuzu at the Rajasthan Rumble to defend his WBO Oriental and Asia Pacific Super middleweight titles on Saturday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்